தமிழ் ஆங்கிலம்
குரு பிரம்மா, குரு விஷ்ணோ, குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம

பெயர்: பி.சுவாமிநாதன்
பிறந்தது : 4.11.1964
சொந்த ஊர் : திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்)
படிப்பு : பி.எஸ்ஸி. (கணிதம்) - கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, எம்.ஏ. (ஜர்னலிஸம்) - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
அனுபவம் : ஆனந்த விகடன் குழுமம் (22 வருடம்)
திரிசக்தி குழுமம் (3 வருடம்)
ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
‘பொதிகை’ தொலைக்காட்சியில் ‘குரு மகிமை’ என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
‘ஜீ தமிழ் தொலைக்காட்சி’யில் ‘அற்புதங்கள் தரும் ஆலயங்கள்’ என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் பயணித்த வெளிநாடுகள்: கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள் (துபாய், அபுதாபி, சார்ஜா, ருவாஸ், புஜேரா), பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை.
சொற்பொழிவுக்காகப் பயணித்த சில இந்திய நகரங்கள்: டெல்லி, புனே, பெங்களூர், அஹமதாபாத், பரோடா, பாலக்காடு, காலடி, மைசூரு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல ஊர்கள்.
சொற்பொழிவுக்காகப் பயணித்த சில தமிழக நகரங்கள்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், விழுப்புரம் உள்ளிட்ட ஏராளமான ஊர்கள்.
பெற்ற விருதுகள்:
• செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது),
• சேஷன் சன்மான் விருது 2017,
• குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்),
• குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்),
• சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
• பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு
• ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
• சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை
இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
• ஜீ தமிழ் தொலைக்காட்சி (‘தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது),
• சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்),
• விஜய் (பக்தி திருவிழா),
• மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்),
• ஜெயா (சிறப்பு விருந்தினர்),
• தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்),
* நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
• வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
• ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்,
• ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்),
• மெகா டி.வி...
ஆன்மிக எழுத்தாளராக:
• தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
• தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
• தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்
விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
• சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை
உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
• ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத்
தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
• மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
• திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னஸ் ஸந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்